எரிக் சொல்ஹெய்மின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது
ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
எரிக் சொல்ஹெய்மினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய சொல்ஹெய்மிற்கு எவ்வித உரிமையும் கிடையாதென அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈட்டிய வெற்றி குறித்த வாழ்த்து செய்தியில் அவர் இதனைக் சுட்டிக்காட்டியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாழ்த்துச் செய்தியில் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறும் சொல்ஹெய்ம் கோரியிருந்தார்.
எனினும் அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உள்விவகாரங்களில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தலையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக