ஐநாவின் இவ்வாண்டுக்கான நிதி உதவி அதிகரிப்பு
இலங்கையின் 2010 ஆண்டுக்கான செயற்திட்டங்களுக்கென ஐக்கிய நாடுகள் சபை தனது நிதியுதவியை அதிகரித்துள்ளது.
அதன்படி ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை 32.88 மில்லியன் ரூபா அதிகரித்துள்ளது.
2010 ஆண்டுக்கான செயற்திட்டங்களுக்கே இந்நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டே இந்நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.
ஐ.நா.உலக உணவுத்திட்ட நிறுவனமானது ஏற்கனவே 2010 ஆம் ஆண்டுக்கென 134.45 மில்லியன் அமெரிக்க டொலரையே இலங்கைக்கென ஒதுக்கியிருந்தது.
இடம்பெயர்ந்தோரின் உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு ,பின்னர் இந்நிதி 163.33 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜோஷெல் ரைன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை, உலக உணவுத் திட்டத்தின் கீழ் கல்வி நடவடிக்கைகளின் போதான உணவு, தாய் - சேய் சுகாதார உணவுத் திட்டம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, மீள்குடியேற்றப்பட்ட, யுத்தப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் வாழும் மக்கள் ஆகியோரைக் கருத்திற் கொண்டே நிதியுதவிகளை வழங்கி வருகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக