JKR. Blogger இயக்குவது.

திங்கள், 30 நவம்பர், 2009

கொங்கோ படகு விபத்தில் 90 பேர் பலி


கொங்கோவில் உள்ள மாய் டோம்பே என்ற ஏரியில் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து நீரில் மூழ்கியது. இந்தப் படகில் 300 பேர் வரை இருந்தனர். மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

முதலில் 70 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. ஆதரவு வானொலி தெரிவித்துள்ளது.

இந்தப் படகு சரக்கு ஏற்றிச் செல்லக் கூடியது. ஆனால் முறைகேடாக பயணிகள், அதுவும் மேலதிகமாக ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து உடல்களையும் படகுக்குள் சிக்கித் தவிப்பவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது.

கொங்கோ நாட்டு மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பெரும்பாலும் படகு பயணத்தையே மேற்கொள்கிறார்கள். அங்கு சாலை வசதி 300 மைல் மட்டுமே உள்ளது. இதனால் படகு போக்குவரத்து மிக முக்கிய இடத்தை வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010