JKR. Blogger இயக்குவது.

திங்கள், 30 நவம்பர், 2009

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் காம்பீர் மீண்டும் முதலிடம்


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌதம் காம்பீர் மீண்டும் முதலிடம் வகித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை வீரர் சங்ககாரா முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து இரண்டாவது இடத்திற்கும், பிறகு மூன்றாவது இடத்திற்கும் காம்பீர் தள்ளப்பட்டார்.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டிகளில், காம்பீர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

சேவாக் நான்கு இடங்கள் முன்னேறி 19ஆவது இடத்தையும், டிராவிட் மற்றும் யுவராஜ் சிங் மூன்று இடங்கள் முன்னேறி தலா 18ஆவது மற்றும் 44ஆவது இடங்களையும் பிடித்துள்ளனர். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஹர்பஜன் சிங் ஓரிடம் முன்னேறி 5ஆவது இடத்தையும், ஸ்ரீசந்த் 30ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010