JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

செய்தியறிக்கை


ஏவுகணைகள்
ஏவுகணைகள்

அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை - சீனா

தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதிக்க போவதாக சீனா கூறியுள்ளது. தாய்வானுக்கு ஆறு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதை தொடர்ந்து சீனா இதனை தெரிவித்துள்ளது.

பீஜீங்கில் இருக்கும் அமெரிக்க தூதரை வரவழைத்து இந்த முடிவால் முக்கியமான பல விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா கூறியுள்ளது. அத்தோடு இராணுவ விஜயங்களை நிறுத்துவதாகவும் சீனா கூறியுள்ளது. இந்த இராணுவ விஜயங்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன் இருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

இறுதியாக தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் தடை விதிக்கப் போவதாகவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த தடைகளால் அந்நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

தாய்வான் பிரிந்து சென்ற மாகாணம் என்று கருதும் சீனா, அமெரிக்கா பிடிவாதமாக தவறான முடிவை எடுத்துள்ளது என்றும் கூறியுள்ளது.


டோகோ கால்பந்து அணிக்கு தடை

டோகோ அணியினர்
டோகோ அணியினர்

அங்கோலாவில் நடைபெற்று வரும் ஆப்ரிக்க கால்பந்து கோப்பை போட்டியில் இருந்து டோகோ விலகியதற்காக அடுத்ததாக நடைபெறவுள்ள இரு ஆப்ரிக்க கால்பந்து கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு டோகோ அணிக்கு தடை விதிப்பதாக ஆப்ரிக்க கால்பந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது நடைபெற்று வரும் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக டோகோ அணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இதனை அடுத்து டோகோ அணி போட்டியில் இருந்து விலகியது.

அங்கோலாவின் கபிண்டா பகுதியில் டோகோ அணியின் பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து வீரர்கள் விரும்பினாலும், பாதுகாப்பு காரணங்களால் தன்னுடைய வீரர்கள் போட்டியில் பங்கேற்க்க மாட்டார்கள் என்று டோகோ அரசு கூறியது.


வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்

ஆளில்லா விமானம்
ஆளில்லா விமானம்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இராணுவ சோதனைச்சாவடி அருகே தற்கொலைத்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தப்பட்சம் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும், இந்த சம்பவத்தில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே இருக்கின்ற பஜூர் பழங்குடியின பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் ஆயுததாரிகளின் வளாகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சோமாலியாவில் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை -சோமாலிய அதிபர்

ஆயுததாரிகள்
ஆயுததாரிகள்

சோமாலியாவின் தென்பகுதியில் பெரிய நிலப்பரப்புகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக இவ்வருடம் பெரும் இராணுவ நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கப் படைகள் தயாராக இருப்பதாக சொமாலிய அதிபர் ஷேக் ஷரீஃப் அகமது கூறியுள்ளார்.

தனது ஆட்சியின் முதலாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கம் அல் ஷபாப், அரசாங்கம் போன்ற பயங்கரவாதக் குழுக்களை தோற்கடித்து, சொமாலியாவில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் என்று அரசு வானொலியில் உரையாற்றிய அதிபர் சூளுரைத்துள்ளார்.

இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் இஸ்லாத்தைக் காப்பதற்காகப் போராடவில்லை; மாறாக வெளிநாட்டு நலன்களைக் காப்பதற்காகவே செயலாற்றுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் மொகதிஷுவில் கடுமையான மோதல்கள் நடந்துவந்ததன் காரணமாக நேற்றைய அதிபரின் உரை இன்றுதான் வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருந்தது.

செய்தியரங்கம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மீது குற்றச்சாட்டு
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மீது குற்றச்சாட்டு

'லங்கா' வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘லங்கா’ வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை குறை கூறியது தொடர்பாக இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் வெள்ளிகிழமையன்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது.


ஐ.பி.சி.சி குழுவின் அறிக்கைகள் குறித்து விமர்சனம்

ஐ.பி.சி.சி தலைவர் ராஜேந்திரா பச்சோரி
ஐ.பி.சி.சி தலைவர் ராஜேந்திரா பச்சோரி

உலக பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசாங்கங்கள் இடையிலான நிபுணர் குழு - ஆங்கிலத்தில் சுருக்கமாக ஐ.பி.சி.சி. என்று அழைக்கப்படும் இக்குழுவானது, தமது அறிக்கைகளுடைய விஞ்ஞான அடிப்படையின் ஆதாரம் தொடர்பில் மேலும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

தென் அமெரிக்காவின் அமேஸான் மழைக்காடுகளுக்கு பருவ நிலை மாற்றத்தால் எழுந்துள்ள அச்சுறுத்தல் தொடர்பில் ஐ.பி.சி.சி. வழங்கிய ஆதாரங்கள், ஒழுங்கான ஆராய்ச்சிக் முடிவுகளில் இருந்து எடுக்கப்படாமல், சுற்றாடல் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெறப்பட்டுள்ளன என்று தற்போது விபரங்கள் வெளியாகியுள்ளன.

இமாலயப் பனி ஏரிகள் அடுத்த நாற்பது ஆண்டுகளில் உருகிவிடும் என்று தாம் எச்சரித்திருந்ததும் தவறு என்று ஐ.பி.சி.சி. சென்ற வாரம் ஒப்புக்கொள்ள நேர்ந்திருந்தது.

பருவநிலை மாற்றத்தின் விளைவாக அமேஸான் காடுகள் வேகமாக அழியும் என்று தெரிவதாக எச்சரித்து ஐ.பி.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வன உயிர் நிதியம் என்ற தொண்டு நிறுவனத்தின் கூற்றுக்களே இடம்பெற்றுள்ளன என்பதை மழைக்காடுகள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தற்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இமாலய பனி ஏரிகள் விரைவில் உருகும் என்ற தவறான எச்சரிக்கையின் பின்னணியிலும் இந்த தொண்டு நிறுவனம் தந்த விபரங்களே அடங்கியுள்ளன.

ஐ.பி.சி.சி.யின் எச்சரிக்கைகளில் பிழைகள் உள்ளன என்ற இந்த விடயம், பருவநிலை மாற்றத்தால் மனித குலம் ஆபத்தை எதிர்கொள்கிறது என்று முன்வைக்கப்படுகின்ற அறிவியல் வாதத்தை பலவீனமடையச் செய்யுமா என்று தமிழ்நாடு அறிவியல் மன்றத்தைச் சேர்ந்த சுற்றாடல் ஆர்வலர் கருணாகரனைத் தொடர்புகொண்டு சாதாத் கேட்டதை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மஹாத்மா காந்தி அஸ்தி கரைக்கப்பட்டது

மஹாத்மா காந்தி
மஹாத்மா காந்தி

இந்திய தேசப்பிதா மஹாத்மா காந்தியுடைய அஸ்தியின் ஒரு பாகம் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகளின் 62ஆவது நினைவு தினமான சனிக்கிழமையன்று, டர்பன் அருகே அஸ்திக் கரைப்பு வைபவம் நடந்துள்ளது.

அர்ச்சகர் ஒருவர் மந்திரங்களை ஓத, கடலில் மலர்கள் தூவப்பட்டு நடந்த இந்த வைபவத்தில் இருநூறு பேர் வரையிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

1948ல் காந்திபடிகள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது அஸ்தி பல கலசங்கங்களில் பகிர்ந்து அடைக்கப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

அவ்வாறு தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்ட அஸ்தியின் ஒரு பகுதி குடும்ப நண்பர் ஒருவரால் இவ்வளவு காலமும் பாதுகாக்கப்பட்டிருந்தது என்று காந்தியின் பேத்தி இலா காந்தி பிபிசியிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010