மஹிந்தவின் வெற்றி குறித்து இந்தியா அகமகிழ்ந்துள்ளது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்குறித்து இந்திய அரசாங்கம் அகமகிழ்ந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் தேர்தலில் வெற்றிபெற்றாலும் அவருடன் இணைந்து செயற்படப்போவதாக இந்தியா அறிக்கையை வெளியிட்டாலும், அமைதியான முறையில் அந்த நாடு மஹிந்த ராஜபக்சவுக்கே தமது ஆதரவை வழங்கி வந்தது.
இந்தியா, இராணுவத்துடன் அல்லது முன்னாள் இராணுவ கட்டமைப்பை விரும்பவில்லை என அடிக்கடி கூறிவந்துள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினை தீர்வுக்கு உரியமுனைப்புகளை மேற்கொள்வார் எனவும், அவர் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுப்பொதி ஒன்றை சமர்ப்பிப்பார் என இந்தியா எதிர்பார்க்கிறது.
இதேவேளை பொதுத்தேர்தலின் பின்னர் தாம் தீர்வு குறித்து அறிவிக்கவுள்ளதாகவும், தமிழ் தலைமைகளுடன் கலந்துரையாடப்படும் எனவும், எனினும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பெரும்பான்மை மக்களின் அங்கீகாரம் அவசியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தியா எதிர்பார்த்துள்ள வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு ஒருபோதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக