JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

சுவிஸ் ஊடகவியலாளரின் விசாவை ரத்துச்செய்யும் தீர்மானம் மீளப்பெறப்பட்டுள்ளது


சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் விசாவை ரத்துச்செய்யும் நடவடிக்கையைஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீளப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் வீசாவை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்துள்ளது. இந்த நிலையில் அவரை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

தகவல் திணைக்கள பணிப்பாளரின் உத்தரவின் படி குறித்த செய்தியாளருக்கான வீசா ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் பி பி அபயகோன் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கான காரணம் எதுவும் தமக்கு தெரியவில்லை என அவர் குறிப்பிடடுள்ளார். இது தொடர்பில் கருத்துரைத்து கரின் வெங்கர், தாம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த போதும் அது நிராகரிக்கப்பட்டு தம்மை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தாம் அரசாங்கத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்,அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வி ஒன்றை கேட்டமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கரின் வெங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறுமாறும், அதுவரை எந்த ஒரு செய்தியாக்கல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாதெனவும் கரின் வெங்கர் இலங்கை அரசாங்கத்தினால் கேட்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010