ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் : புதிய இடதுசாரி முன்னணி பகிஷ்கரிப்பு
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை புதிய இடதுசாரி முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்று அதன் தலைவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா நடவடிக்கைகள் மேற்கொள்வாராயின் அவருக்கு ஆதரவு வழங்குவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அவர் எமக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இத்தேர்தலில் நாம் பல்வேறு அசௌகரியங்களுக்குத் தாம் முகங் கொடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளில் இருந்த விகிதாசார வித்தியாசம் மக்களை பல்வேறு வகையிலும் சிந்திக்க வைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பிரதான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஏதாவது நடவடிக்கை எடுப்பாராயின், அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
இராணுவத் தளபதியாக, முப்படைகளின் பிரதானியாக கடமையாற்றிய அவருக்கு எம்மை விட பல தகவல்கள் தெரிந்திருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது" என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக