JKR. Blogger இயக்குவது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான 5 நாள் மாநாடு - ஜெனிவாவில் ஆரம்பம்


ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள், காலநிலை மாற்றம் தொடர்பான 5 நாள் மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் கூடினர். வெள்ளம், வரட்சி போன்ற காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதற்கான வழிமுறைகள் குறித்து இந்த உலக காலநிலை மாற்ற மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது. சுனாமிகள் மற்றும் சூறாவளிகள் என்பன தாக்குவதற்கு முன்பே அது தொடர்பான எச்சரிக்கைகளை அனைவரும் பெறக்கூடிய வகையில் உலகளாவிய கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கõகக் கொண்டுள்ளது. பூகோள வெப்பமாதலை குறைப்பதற்கு அத்தியாவசியமான எரிபொருள் பாவனை மற்றும் பச்சை இல்ல வாயு வெளியீடுகளை குறைத்தல் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படமாட்டாது எனவும், அதற்குப் பதிலாக காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் முன்கூட்டியே தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் எதிர்கொண்டுள்ள குறைபாடுகளே பாரிய அழிவுகளுக்கு வித்திடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பச்சை இல்ல வாயு வெளியீடுகளை குறைப்பது தொடர்பான 1997 ஆம் ஆண்டு கயோடோ உடன்படிக்கை குறித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் டென்மார்கில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010