JKR. Blogger இயக்குவது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

புலிக் கொடிகள் பிடிக்கப்படும் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.:பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு சமர்பணம்


கனடாவில் வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி இது. சற்று ஆழமாக வாசித்துப் பார்த்தால் ‘கொடி’ என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆமாம் புலிகளின் கொடியை பிடிக்கும் எந்தப் போராட்டத்திலும் என்று சொல்வதைவிட, புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்பதை அழித்து விட்டு தமிழரின் தேசியக் கொடி என பிரகடனப்படுத்திய கொடியை பிடிக்கும் நிகழ்வுகளைத்தான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பதை யாவரும் மிக இலகுவாக இனம் காண முடியும்.
இந்த முடிவை எடுத்து பகிரங்கமாக பத்திரிகை மூலம் பிரகடனப்படுத்தியிருப்பவர்கள் பூநகரி அபிவிருத்திச் சங்கம் (கனடா). முதலில் அவர்களுக்கு ஒரு சபாஷ். மிகச்சரியான முடிவை எடுத்திருப்பதற்காக மட்டுமல்ல அதனை பத்திரிகை வாயிலாக துணிச்சலாக வெளியிட்டமைக்காகவும். கூடவே அதற்கான காரண காரியத்தையும் தெளிவாக கூறியிருக்கினறனர் ‘கடந்தகாலங்களின் போராட்டங்களில் பின்பற்றிய முறைமைகளை உலக அரசுகள் ஏற்க மறுத்துள்ளன’. புலிக் கொடியையும். பிரபாகரனின் படத்தையும் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் அவலங்களைப்பற்றி போராட்டங்கள் நடத்தியமை விழலுக்கு இறைத்த நீராகிற்று என்று உணர்ந்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடே ‘கொடி’ தவிர்ப்பும், பதாகைகளை மாற்ற முற்பட்ட தீர்மானங்களும், அதற்கான செயற்பாடுகளும். நாம் அறிந்தவரை பூநகரி மக்கள்தான் முதன் முதலாக இது போன்ற முடிவை எடுத்து பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்கள்.
யாழ் குடாநாட்டையும் ஏனைய இலங்கையின் பகுதிகளையும் இணைக்கும் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த சங்குப்பிட்டி பூநகரியில்தான் உள்ளது. போராட்ட காலங்களில் ஆனையிறவை தவிர்த்து பாதுகாப்பாக மக்கள் பயணித்த பிரதேசங்களை கொண்டதும் இதே பூநகரிதான். பூநகரி ‘மொட்டைக்கருப்பன்;’ என்ற தமிழரின் பிரதான உணவு அரிசி மூலம் உலகெங்கும் பெயர் நிலை நாட்ட காரணமானதும் இதே பூநகரிதான். அந்த அளவிற்கு தரம் மிக்க நெல்லை விளைவித்த பூமி இது. இப் பூமியைப்பற்றி, பூநகரி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தவுடன் பிரபாகரன் சொன்னார் ‘பூநகரி வளமற்ற இடம். இது எமக்கு முக்கிய இடம் இல்லை’ என்று. இதற்கான ‘பழி’ வாங்கலைத்தான் இன்று பூநகரி மக்கள் எடுத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இராணுவக் கேந்;திர நிலையமாக எடுத்து நோக்கினாலும் பிரபாகரன் அறிக்கை அவர்; இராணுவ விடயங்களிலும் எவ்வளவு முட்டாள் என்று எதிர்வு கூறி நிற்கின்றது.
இன்னும் ஒரு சிறப்பும் இவ் பூநகரி மண்ணிற்கு உள்ளது. ஆமாம் நம்புங்கள் பிரபாகரனுக்கு பெண் மதிவதனி கிடைக்க இவ் மண்ணின் மைந்தன் ஒருவன்தான் காரணம். 83 கலவரத்தை தொடர்ந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பேராதனியா, கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் அணிதிரண்டு தமக்கான கல்விகளை யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர ஆவன செய்ய வேண்டும், தான் இனி தென்னிலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு திரும்பிப் போவதில்லை போன்ற விடயங்களை முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்தனர். இதற்கான தலமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயாராக இருக்கவில்லை முழுவேகத்துடன் செயற்படவில்லை. இப்படியான சூழல்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘யுஉவழைn உழஅஅவைல’ என்று ஒன்று பல்கலைக்கழக மாணவர்சங்கத்திற்கு மாற்றாக தெரிவு செய்யப்பட்டு போராட்டங்களை முன்னெடுத்து செல்வது அன்றைய நிகழ்வுகளில் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்ட ‘யுஉவழைn உழஅஅவைல’ இன் தலைவன் விமலேஸ்வரன் பூநகரியின் மைந்தன். மிகவும் சிறப்பாகவும், சரியாகவும், போர்க் குணாம்சத்துடனும் அப் போராட்டத்தை ஒரு வெகுஜனப் போராட்டமாக முன்னெடுத்ததில் விமலேஜ்வரனின் பங்கு மகத்தானது.
மாதக்கணக்கில் வௌ;வேறு வடிவங்களில் முன்னேறிய இவ் வெகுஜனப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 3 பெண்களும் 4 ஆண்களும் கலந்து கொண்டனர். இப் போராளிகளின் பட்டியலை விமலேஸ்வரன் தலைமையில் உள்ள ‘யுஉவழைn உழஅஅவைல’ இறுதி முடிவு செய்தது. இதில் ஒருத்திதான் பிரபாகரனால் கடத்தப்பட்டு காந்தர்வ மணம் புரியப்பட்ட மதிவதனி. போராட்டக் குழுத்தலைவன் விமலேஸ்வரனின் போராட்டக் குழுவில் மதிவதனி உள்ளடகப்பட்டதன் உண்மை நிகழ்வு இதுவே. இந் நிகழ்வை பூநகரியின் மைந்தன் விமலேஸ்வரன் பிரபாகரனுக்கு ‘பெண்’ கொடுத்ததாக கூறலாம்தானே.இவ் கடத்தல் நிகழ்வு ஒரு சீரிய எழுச்சி கண்டு வந்த ஒரு வெகுஜனப் போராட்டத்தை திடீரென மழுங்கடித்து சாகப்பண்ணிய பெருமை அன்றைய ‘அரை நிர்வாண யாழ்ப்பாணத்தலைவர்’ கிட்டு தலைவரின் வழிநடத்தலில் செய்து முடித்தான். இப் உண்ணாவிரதிகளைக் கடத்தி வெகுஜனப் போராட்டத்தை சாகடித்த புலிகளை சகல பல்கலைக்கழக மாணவர்களும் விமர்சித்தனர், கண்டனம் தெரிவித்தனர். இதன் பலன் தலைமறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது விமலேஸ்வரனுக்கு. பின்பு ‘அகண்ட இந்திய விஸ்தரிப்பு வாதம்’ புகழ் திருநாவுக்கரசு போன்றவர்களின் ஆலோசனைப்படி புலிகளின் ‘ஆசீர்வாதத்துடன்’ பல்கலைக்கழகம் திரும்பிய விமலேஸ்வரன் சட்டநாதர் கோவிலடியில் வஞ்சகமாக புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உண்ணாவிரதப் போராட்ட உறுப்பினராக மதிவதனி கலந்து கொள்ளாவிட்டால் இன்று மதிவதனி எம்மத்தியில் வாழ்ந்திருப்பார். புங்குடுதீவின் சனத் தொகையில் நிச்சமாக ஒருவர்அதிகமாக இருந்திருப்பார். இச்சம்பவத்தையும் சீர்தூக்கிப் பார்த்துத்தானோ பூநகரிமக்கள் புலிப்பினாமிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்க புறப்பட்டு ‘கொடி’ பிடிப்பதில்லை என்ற முடிவெடுத்து பத்திரிகையில் அறிக்கை விட்டுள்ளார்களோ? கூட்டத்தில் கலந்து கொண்ட உருத்திரகுமாரனை சில கிழமைகளுக்கு முன்பு அமெரிக்காவில் சென்று ‘தரிசனம்’ பெற்று விசுவாசம் தெரிவித்து வந்த பூநகரியான் என்று தன்னைத்தானே அழைப்பவனுக்கு இது வெளிச்சம் என்று கூறமுடியவில்லை. குமாரசூரியர் காலம் தொடக்கம் 90 களின் முற்பகுதி வரைக்கும் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதில் ‘கடமை’ ‘கண்ணியம்’ ‘கட்டுப்பாடு’ என்றிருந்து, விடுலையைப் போராட்டத்தை விலக்கி வைத்திருந்த ‘புதிய’ வானொலி ‘ஆய்வாளருக்கு’ எங்கே தெரியப் போகின்றது மக்கள் போராளி விமலேஸ்வரன்பற்றி.
பூநகரி மக்களின் ‘கொடி தவிர்ப்பு’ மாதிரியான முடிவுகளை, செயற்பாடுகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊர் சங்கங்கள், பொது அமைப்புக்கள் புலிகள் ‘பலமாக’ இருந்த காலங்களிலேயே எடுத்திருந்தும் அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் இரகசியச் செயற்பாட்டின் மூலம் நடைமுறைப்படுத்தி வந்தனர். அவர்களின் விபரம் எம்மிடம் இருப்பினும் புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தின் ‘எச்ச சொச்சங்கள்’ இன் பயப்பிராந்தி இன்னும் ஒரு தரப்பு மக்களை விட்டு நீக்கிவிடாதவிடத்து அவற்றை நாம் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. ‘நாடுகடந்த தமிழ் ஈழம்’ என்ற உத்தேச விடயத்தில் இணைந்துள்ள வெளிநாட்டு அமைப்புக்கள் எவையென உருத்திரகுமாரன் பத்திரிகை அறிக்கையில் வெளியிட்டு செய்த ‘காட்டிக் கொடுப்புக்களையும்., புத்தி சாதுர்சியமற்ற செயற்பாடுகளையும் நாம் ஊர்ச் சங்கங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு செய்யப் போவதில்லை.
கிளிநொச்சி வீழ்ந்து பிரபாகரன் முழந்தாள் இட்டு இலங்கை அரசாங்கத்திடம் நந்திக்கடல் ஓரம் மட்டியிடுவதற்கு முதல்வரை வெளிநாடுகளில் நடைபெற்ற கவனஈர்ப்பு, மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம். வண்டிகட்டி வாஷிங்ரன் போன நிகழ்வு வரைக்கும் இப் போராட்டங்களில் இணைந்திருந்த பொதுமக்களில் பலர் போர் சூழலில் சிக்குண்டு மரணித்துக் கொண்டிருந்த தமது உறவுகளுக்காகவே இப் போராட்டங்களில் இணைந்திருந்தனர். இப் பொதுமக்களின் உண்மையான உணர்வுகளையும், உழைப்புக்களையும், போராட்ட வலுக்களையும் தாங்கிய கொடிகளும் (புலிக் கொடி), பதாகைகளும் (தமிழ் ஈழம்), தனிநபர் புகைப்படமும் (பிரபாகரன்) நாசப்படுத்திவிட்டது, வீணாக்கிவிட்டன.
இவ் நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் நாம் பல கட்டுரைகள், ஆய்வுகள், செய்திகளில் சொல்லி இருந்தோம், போர் முனையில் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு மனிதக் கேடயங்களாகப் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தி இலங்கை அரசு, புலிகளுக்கு எதிராக போராடுங்கள் நிச்சயமாக சர்வதேச சமூகம் எங்களைத் திரும்பிப்பார்க்கும். போர் நிறுத்தம் ஏற்படும் பொது மக்கள் காப்பாற்றப்படுவார்கள் புலிகள் ஆயுதத்தை ஓப்படைத்து போர் கேடயங்களாக உள்ள மக்களை விடுவிக்கப்படுவார்கள். இதன் மூலமே எம்மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று. யாரும் கேட்கவில்லை.
இவ்வாறு செய்திருந்தால் இன்று விசுவமடு தொடங்கி நந்திக்கடலில் முடிந்த இறுதிச் மனித கொலைச் சங்காரத்தில் (பொதுமக்கள் மரணம் இக்காலகட்டத்திலேயே தினம் நூறு என்ற கணக்கை ஆரம்பிக்க தொடங்கியது) பல ஆயிரம் பொது மக்களும், புலிகளும் ஏன் சில வேளைகளில் புலித் தலைவன் பிரபாவும் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். கூடவே 3 இலட்சம் மக்கள் முள்ளுக்கம்பியிற்கு பின்னால் தவித்திருக்கமாட்டார்கள். ஒன்று இரண்டு அல்ல பல கட்டுரைகளில், பல கட்டுரையாளர்கள் எச்சரித்தே வந்தனர். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போகின. கூடவே இக்கட்டுரையாளர்கள் வழமைபோல் புலிகளாலும் புலிப்பினாமிகளாலும் துரோகிகள் ஆக்கப்பட்டனர். அன்று ‘உள்ளுக்கு வரவிட்டு அடிப்பார் மேதகு’ ‘கிளிநொச்சி இன்னும் ஒரு லெனின் கிராட்’ என ‘அரசியல் ஆய்வுரை’ வறங்கிய யாரும் இன்று தலை மறைவு, இன்னும் ஒரு அருளம்பலத்தைத் தேடி ஓடிவிட்டனரோ?
இனிவரும் நாட்களின் இன்னும் பல சங்கங்கள் தமது ‘கொடி தவிர்ப்பு’ பிரகடனத்தை உலகெங்கும் பகிரங்கப்படுத்துவர். வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள ‘ஜனநாக சூழலை’ அவர்கள் சுவாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ் ‘பிராணாயம்’ எடரெங்கும் பரவி எம் வாழ்வை ஆரோக்கியமானதாக உறுதிப்படுத்தும். மக்கள் போராளி, பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு இது சமர்பணம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010