JKR. Blogger இயக்குவது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

தமிழிசைக்கு என்று ஒரு அகராதி


அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இசைச் சொற்களை கொண்டு தமிழ் மொழியில் ஒரு அகராதி வெளிவருகிறது.
தமிழிசைக்கான சொற்களை தேர்ந்தெடுத்து இந்த அகராதி தொகுக்கப்பட்டுள்ளதாக அதை தொகுத்துள்ள ஓய்வு பெற்ற தமிழக அரசு அதிகாரியான நா. மம்மது தமிழோசையிடம் தெரிவித்தார்.
தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி இன்று வரையுள்ள தமிழிசை நூல்களில் இருந்து சொற்களை தேர்தெடுத்து, அகர வரிசைப்படுத்தி அதற்கான பொருளுடன் இந்த அகராதி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த அகராதியின் முதல் பதிப்பில் ஐயாயிரத்துக்கும் மேலான பதிவுகள் இடம் பெற்றுள்ளதாகவும், இந்த இசை அகராதி ஒரு துறை அகராதி என்றும் மம்மது அவர்கள் தெரிவிக்கிறார். பழங்கால தமிழிசை முதல் தற்காலத்தில் பாடப்பட்டு வரும் கர்நாடக இசை பாடல்கள் தொடர்பான சொற்களும் பதங்களும் அந்த அகராதியில் இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
தமிழ் சொற்கள் மட்டுமே இந்த அகராதியில் தலைச் சொற்களாக படைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
தமிழிசைக்கான இந்த அகராதி இசை பயில்பவர்களுக்கு மட்டுமல்லாமல், பயிற்றுனர்களுக்கும் இசை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட பலருக்கு இது உதவியாக இருக்கும் என்று அவர் கருத்து வெளியிடுகிறார்.
பண் களஞ்சியமாக வெளிவரவுள்ள அடுத்த பதிப்பு பண்களை வைத்து தொகுத்த அகராதியாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.news from bbc

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010