ஷில்பாஷெட்டி திருமணம் : மும்பையில் 22ம்தேதி நடக்கிறது

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி - தொழிலதிபர் ராஜ்குந்த்ரா திருமணம் மும்பையில் வருகிற 22ம்தேதி நடக்கிறது. லண்டனில் நடந்த பிக் பிரதர் நிகழ்ச்சியின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஷில்பா ஷெட்டிக்கும், லண்டன் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ம்தேதி நடந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஷில்பாவின் தங்கை ஷமீரா ஷெட்டி பங்கேற்கவில்லை. அதனால் அவர் ஷமீதாக்கு ஏற்ற நாளில்தான் எனது திருமணம் நடக்கும் என்று ஏற்கனவே ஷில்பா தெரிவித்திருந்தார். இந்நிலையில் வருகிற 22ம்தேதி ஷில்பா - ராஜ்குந்த்ரா திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள ஷில்பாவின் பிசினஸ் பார்ட்னர் கிரன்பாவாவின் பங்களாவில் நடைபெறவுள்ள இந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்கிறார்கள். அதனைத்தொடர்ந்து 24ம்தேதி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் ஷில்பாவில் திரையுலக நண்பர்கள், பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக