JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 6 நவம்பர், 2009

சர்வதேச நாணய நிதியம் 329.4 மில். அமெ. டொலர் கடன் வழங்கத் தீர்மானம்


இலங்கையின் பொருளாதாரத்தை மீளமைக்கும் பொருட்டு தமது இரண்டாம் கட்ட நிதியுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மனித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் நேற்று வாஷிங்டனில் வெளியாகியுள்ளது.

இதன்படி இலங்கைக்கு 329 .4 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கவுள்ளது. நிலையான இரண்டாம் கட்ட கடன்தொகை ஏற்பாடான 658.8 மில்லியன் டொலரின் கீழேயே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி முகாமைப் பணிப்பாளர், டொகாடோசி காடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அண்மைக்கால பொருளாதார வளர்ச்சிப் போக்கு திருப்திகரமாக உள்ளது. அவசியமான மீளமைப்பு திட்டங்கள் உரிய வகையில் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே இந்த தொகையை வழங்கத் தாம் இணங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தமாக இலங்கைக்கான தமது கடன் திட்டத்தை, கடந்த ஜூலை மாதத்தில் மேற்படி நிதியம் தொடங்கியது. அன்று முதல் இலங்கை அரசாங்கம் தமது பொருளாதாரத்தில் பாரிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

குறிப்பாக பொதுமக்களுக்கான மானிய குறைப்பு, சம்பள அதிகரிப்பின்மை உட்பட்ட விடயங்கள் இதில் அடங்குகின்றன.

2010 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்காது கணக்கு அறிக்கையை மட்டும் இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமையும் இதில் ஒரு காரணமாகும்.

இந்நிலையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்திற்கு அமைய வரவுசெலவுத் திட்டத்திற்கு பதிலாக கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் தமது கடனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010