நாட்டுக்கு நன்மை தரக்கூடிய வெளியுறவுக் கொள்கையே தேவை : அமைச்சர் சமரசிங்க

தொழில்சார் பேரவையினால் நடத்தப்பட்ட 22 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் இலங்கை மக்களுடன் அர்த்தபூர்வமான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த சில புலம்பெயர் மக்கள் தமது வெளிநாட்டு உறவுகளைப் பிழையான வழியில் பயன்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான பிரசாரங்களிலும், பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டும் பணிகளிலும் சில புலம்பெயர் மக்கள் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
செனல் 4 வீடியோக் காட்சி மற்றும் ஹிலாரி கிளிண்டனின் உரை போன்றவை இவ்வாறான செயற்பாடுகளின் வெளிப்பாடே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போலிப் பிரசாரங்களுக்கு அரசாங்கம் சிறந்த முறையில் பதிலளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு எதிராக செயற்படும் சக்திகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக