சரத் பொன்சேகாவுடன் இருந்த 9 தப்பி ஓடிய இராணுவத்தினர் கையளிப்பு

கொழும்பின் லேக் வீவ் ஹொட்டலில் தங்கி இருக்கும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் தங்கியிருந்த இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் எனப்படும் ஒன்பது பேர் இன்று இராணுவத்திடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை சரத் பொன்சேகாவும் அவரது மனைவியும், குறித்த ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில் படையினர் நேற்று இரவு முதல் அதனை சுற்றி வளைத்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக