கேணல் ராம் விடுவிக்கப்பட்டுள்ளார்: சரத் பொன்சேகாவின் தரப்பு; கைது செய்யப்பட்டிருக்கவில்லை: அரசாங்கம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம், அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்துள்ளது.
தடுப்பு காவலில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் தரப்பு அறிக்கை ஒன்றில் குறி;ப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் கேணல் ராம் மறைந்திருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தலைமை தாங்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள அந்த அறிக்கையில், இது தேர்தலை மாத்திரமன்றி பொதுமக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த அறிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள, இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கேணல் ராம் என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதியை படையினர் ஒருபோதும் கைதுசெய்திருக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்.
கேணல் ராம் கிழக்கில் மறைந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக