JKR. Blogger இயக்குவது.

திங்கள், 18 ஜனவரி, 2010

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே சதாசிவம் கனகரட்ணம் எம்.பி விடுதலை-


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சதாசிவம் கனகரட்ணம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் செய்திகள் தெரிவிக்கின்றன. 08மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த எம்.பி இதனைத் தனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொலைபேசியில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே தாம் விடுவிக்கப்பட்டதாக சதாசிவம் கனகரட்ணம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தெரிவித்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. எம்.பி கனகரட்ணத்துக்கு மன்னார், வவுனியா வீதியில் உள்ள வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றை அரசு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு மீள்குடியேற்ற அமைச்சின் வாகனமும் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று மேற்கண்ட செய்தியினை வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010