JKR. Blogger இயக்குவது.

புதன், 27 ஜனவரி, 2010

சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் படையினரால் சுற்றி வளைப்பு


சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கும் தெபான பன்னியப்பிட்டிய பகுதியை படையினர் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிகளே அதிக முக்கியத்துவம் வழங்கி வந்தன. அத்துடன் குறித்த ஊடகங்களே சுயாதீனமாக இயங்கிவருகின்றன.

இதன் காரணமாக அந்த ஊடகத்தின் செயற்பாடுகளை தடுக்கும் வகையில், படையினர் இந்த சுற்றிவளைப்பை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம் பாதுகாப்பு கருதி கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு தொடர்பான செய்தி நிகழ்வு ஒளிப்பரப்பப்படுவதை தடுக்கவே பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010