வவுனியா குடியிருப்புக் குளத்தில் இருந்து ஆணிண் சடலம் மீட்பு
.jpg)
வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள குடியிருப்பு குளத்தில் இருந்து ஆணிண் சடலம் ஒன்றினை நேற்று வியாழக்கிழமை மீட்ட பொலிஸார் சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
எனினும் சடலம் நீரில் கிடந்தமையினால் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருக்குலைந்துள்ளது.
அதேவேளை மரணத்திற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இதேவேளை மூன்று நாட்களுக்கு முன்னரும் இக்குளத்தில் குளிக்கச்சென்ற 10 வயதுடைய சிறுவன் ஒருவனும் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக