JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

சரத் ஆதரவாளர்கள் மீது தூப்பாக்கிப் பிரயோகம்; ஒரு பெண் பலி : தங்கல்லையில் சம்பவம்


தங்கல்லை, உபுன்கம தலுன்ன பகுதியில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் பயணம் செய்த பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏழு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

திஸ்ஸமஹராமவில் நடைபெறவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தீவிரமாகத் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பிரிவினர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் நால்வர் தங்கல்லை வைத்தியசாலையிலும் மூவர் மாத்தறை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதான பெண் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010