மனித உரிமை குறித்து முப்படைகளுக்கு பயிற்சி : ஆணைக்குழு தெரிவிப்பு
மனித உரிமைகள் தொடர்பாகவும் மனித உரிமைகளைப் பேணுவதில் அரச தரப்பினருக்கு உரிய கடப்பாடு தொடர்பாகவும் முப்படையினருக்குப் பயிற்சியளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக பொலிஸாருக்கு விளக்கங்களும் பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பொலிஸாருக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் சமூக பாதுகாவலர்கள் என்ற வகையில் முப்படையினருக்கு இது குறித்த தெளிவு அவசியம் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக