JKR. Blogger இயக்குவது.

புதன், 30 செப்டம்பர், 2009

157 பேரை சுட்டு தள்ளிய கினியா ராணுவம்-பெண்கள் கற்பழிப்பு


கினியாவில் ராணுவ ஆட்சியாளருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் சுமார் 157 பேரை ராணுவம் சுட்டு கொன்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பல பெண்களின் கற்பு சூறையாடப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவின் அதிபராக இருந்த லன்சானா கோன்டே கடந்த டிசம்பரில் மரணமடைந்தார். இதையடுத்து ராணுவ தளபதியாக இருந்த மௌசா டாடிஸ் காமரா அதிபராக பதவியேற்று கொண்டார்.

அப்போது அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அவர் தான் தேர்தல் வரைக்கும் தான் பதவியில் இருக்க போவதாகவும், மேலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் உறுதியளித்தார்.

இந்நிலையில் தற்போது அவர் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் தான் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தேர்தலின் போது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி ஆட்சியை மீண்டும் பிடிக்க திட்டமிட்டிருப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின.

இதையடுத்து நேற்று முன்தினம் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு கோனக்ரி நகரில் காமராவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் அமைதியாக ஒரு மைதானத்தில் கூடியிருந்த போது, அங்கு வந்த ராணுவம் அவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டது.

இதில் சுமார் 157 பேர் இறந்தனர். அவர்களில் 128 பேரின் உடல்கள் அந்நகர மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1200 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணுவ வீரர்கள் பல பெண்களிடம் அநாகரீக நடந்து கொண்டதாகவும், பலரையும் தூக்கி சென்று கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது.

இரண்டு நாள் துக்கம்…

ஆனால், அதிபர் கூறுகையில்,

இந்த தாக்குதலுக்கு நான் உத்தரவிடவில்லை. கூட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக ராணுவம் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010