JKR. Blogger இயக்குவது.

புதன், 30 செப்டம்பர், 2009

கூட்டொப்பந்தம் குறித்து தொழிலாளர்களுக்குத்தெளிவில்லை :தொழில் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்


தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் பெருந்தோட்டக்கம்பனிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தின் முழு விபரங்களையும் தோட்டத்தொழிலாளர்கள் தமது தாய்மொழியில் அறிந்து கொள்வதற்கு தொழில் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

புதிதாக செய்து கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தம் இவ்வருடம் ஏப்பரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகின்றது.இந்த ஒப்பந்தத்தில் அடிப்படைச்சம்பளம் 200 ரூபாவிலிருந்து

285 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏப்பரல் மாதம் தொடக்கம் 85 ரூபாவுக்கான ஊழியர் சேமலாப நிதி ,ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கட்டாயமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இவ்விடயம் தொடர்பாக கூட்டொப்பந்த தரப்புக்கள் தொடர்ந்து மொளனம் சாதித்து வருகின்றன.

இத்துடன் கூட்டொப்பந்தத்தி;ல் குறிப்பிட்டுள்ள ஏனைய விடயங்கள் குறித்தும் தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது.

இந்த நிலையில் கூட்டொப்பந்தத்தினை சட்டமூலமாக்கும் பொறுப்பு தொழில் ஆணையாளருக்கு இருப்பதால் கூட்டொப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் குறித்து தொழிலாளர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது தொழில் ஆணையாளரின் பொறுப்பாகும். என்று இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010