JKR. Blogger இயக்குவது.

புதன், 30 செப்டம்பர், 2009

நாட்டின் இறைமைக்குக் குந்தகம் விளைவிக்க எவருக்கும் உரிமையில்லை : கெஹெலிய ரம்புக்வெல

நாட்டின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட எந்தவொரு நாட்டுக்கும் உரிமை கிடையாதென தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடந்த வைபமொன்றில் உiரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்கின்றது. அதன் தலைவர் முப்படைகளுக்கும் தளபதியாவார். எனவே இறைமையுள்ள நாடொன்றுக்கு வெளியிலிருந்து அழுத்தம் பிரயோகித்து பக்கச் சார்புடன் நடந்துகொள்வதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது.

சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகள் இத்தகைய அழுத்தங்களைப பிரயோகிக்க முயலுகின்றன. இலங்கையின் இறைமையைப் பாதுகாக்க இத்தகைய சக்திகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010