இந்திய அணி 279 ஓட்டங்கள்

இலங்கை இந்திய அணிகளுக்கிடையே பங்களாதேஷில் தற்போது நடைபெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் பகலிரவு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், யுவராஜ் சிங் 74 ஓட்டங்களையும் விரேந்தர் ஷேவாக் 47 ஓட்டங்களையும் அதிகூடுதலாக பெற்றதுடன் அணித் தலைவர் டோனி,ரெய்னா,ஜடேஜா ஆகியோர் முறையே 37,35,39 ஓட்டங்களைப் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களில் வெலகெதர, 10 ஓவர்கள் பந்துவீசி 66 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இலங்கை அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக