JKR. Blogger இயக்குவது.

திங்கள், 11 ஜனவரி, 2010

சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸார் மீது நடவடிக்கை : திணைக்களம் பணிப்பு


தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸ் அதிகாரிகள் 15 பேர் தொடர்பாக தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களத்துக்குத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பணித்துள்ளார் எனச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களது பதாகைகள், சுவரொட்டிகளைக் கடந்த ஜனவரி 7ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு திணைக்களம் கடுமையான உத்தரவினை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010