கனடாவில் வாழும் இலங்கை தமிழர்கள் இருவருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகனைகளை கொள்வனவு செய்ய முயற்சித்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டு கனேடிய பிரஜைகளான இலங்கை தமிழர்களுக்கு அமெரிக்காவில் 26 மற்றும் 14 வருட சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
30 வயதான சதாஜன் சராசந்திரன் மற்றும் 55 வயதான நடராசா யோகராசா ஆகியோருக்கே இந்த தண்டனை நேற்று வழங்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனவரியில் சராசந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகனைகளை கொள்வனவு செய்ய முயற்சித்தார் என்றும் அதே காலக்கட்டத்தில் நடராசா ஆயுத உதவிகளை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு செய்துக்கொடுக்க முயற்சித்தார் என்றும் குற்றம் சுமத்தியே அமெரிக்க மாவட்ட நீதிவான் ரெமொன்ட் டேயரி தமது தீர்ப்பை அறிவித்துள்ளார்.
இதேவேளை இந்த தண்டனையின் மூலம் பயங்கரவாத அமைப்புகளையும் அதன் ஆதரவாளர்களையும் முழு சட்டத்தையும் பயன்படுத்தி கட்டுப்படுத்த தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்டத்தரணியான பென்டன் கெம்பல் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக