JKR. Blogger இயக்குவது.

சனி, 12 செப்டம்பர், 2009

வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்து யாழ் வரும் மக்களுக்காக தற்காலிகமாக காரைநகர் தோப்புக்காடு குடியேற்ற வீடுகளை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள யாழ் குடாநாட்டைச் சேர்ந்த மக்களை காரைநகர் பகுதிகளில் குடியேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள யாழ் குடாநாட்டை சேர்ந்த சுமார் 48,000 மக்களையும் எதிர்வரும் பருவ காலநிலைகளை கருத்திற் கொண்டு அம் மக்களை நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியேற்றி அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் அவர்கள் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றார். தற்போது மூன்று கட்டங்களாக யாழ் குடாநாட்டு மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட நிலையில் ஏனைய யாழ் குடாநாட்டை சேர்ந்த மக்களையும் கட்டங் கட்டமாக யாழ் குடாநாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்து யாழ் குடாநாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ள மக்களுக்கான வதிவிடத்தினை உறுதிப்படுத்தும் முகமாக காரைநகர் தோப்புக்காடு குடியேற்ற வீடுகளை அம் மக்களின் பாவனைக்கு தற்காலிகமாக வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளின் ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் ஆரம்ப கட்டமாக இப் பகுதிகளில் உள்ள வீதிகள், குடியிருப்புக் காணிகள் என்பவற்றினை மக்கள் பாவனைக்கு ஏற்ற வகையில் துப்பரவு செய்து திருத்தி அமைக்கும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ் வேலைத் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மக்களுக்கான உதவித் திட்டங்களையும் வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010