JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 22 ஜனவரி, 2010

எதிர்க்கட்சி ஆதரவாளர் டிரான் அலஸ் வீட்டின் மீது கிரனேட் தாக்குதல்


எதிர்க்கட்சி ஆதரவாளர் டிரான் அலஸின் நாவலவில் உள்ள வீட்டின் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை இனந்தெரியாத ஆயுததாரிகள் கிரனேட் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் இதன் போது டிரான் அலஸுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாத போதும் அவரது வீடு மற்றும் கார் போன்றவை முற்றாகச் சேதமடைந்துள்ளன.
வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளே இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010