JKR. Blogger இயக்குவது.

சனி, 30 ஜனவரி, 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதவியை இராஜினாமாச் செய்யக் கூடாது எனக் கோரி குடாநாடு முழுவதும் ஹர்த்தால்!


கடந்த காலங்களில் ஒரு சில ஊடகங்கள் ஒரு சில அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தீயசக்திகள் தங்களது சுயலாப இருப்பை கருத்தில் கொண்டு எமது மக்களை தவறான பாதையில் திசை திருப்பி வந்துள்ள நிலையில் இம்மக்களை நடைமுறைச் சாத்தியமான நேர்வழிக்கு கொண்டு வருவதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரும்பாடுபட்டு உழைத்து வரும் நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இவ்விடயங்கள் தொடர்பில் அமைச்சர் அவர்கள் எமது மக்களிடையே தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.

எனினும் அமைச்சர் அவர்களது கருத்துகளுக்கு எமது மக்கள் சரியான வகையில் செவிமடுக்காததையடுத்து தனது பாராளுமன்ற பதவியை தான் இராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்தை அடுத்து அமைச்சர் அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்யக் கூடாது எனக் கோரி யாழ் குடாநாட்டு மக்களும் பொது அமைப்புக்களும் இன்றைய தினம் காலை யாழ் குடாநாடு தழுவிய பொது ஹர்த்தால் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.

மேற்படி நடவடிக்கை காரணமாக யாழ் குடாநாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று காலை முதல் யாழ் குடாநாடு முழுவதும் சென்று மேற்படி ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடி இந்நடவடிக்கையை நிறுத்துவதற்கும் யாழ் குடாநாட்டில் இயல்பு நிலையை மீளக் கொண்டுவருவதற்கும் உடனடி நடவடிக்கைககளை எடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010