JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

மஹாத்மா காந்தியின் அஸ்தி தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கரைக்கப்பட்டது


மஹாத்மா காந்தியுடைய அஸ்தியின் ஒரு பாகம் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகளின் 62ஆவது நினைவு தினமான சனிக்கிழமையன்று, டர்பன் அருகே அஸ்திக் கரைப்பு வைபவம் நடந்துள்ளது.அர்ச்சகர் ஒருவர் மந்திரங்களை ஓத, கடலில் மலர்கள் தூவப்பட்டு நடந்த இந்த வைபவத்தில் இருநூறு பேர் வரையிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

1948 இல் காந்திபடிகள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது அஸ்தி பல கலசங்கங்களில் பகிர்ந்து அடைக்கப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

அவ்வாறு தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்ட அஸ்தியின் ஒரு பகுதி குடும்ப நண்பர் ஒருவரால் இவ்வளவு காலமும் பாதுகாக்கப்பட்டிருந்தது என்று காந்தியின் பேத்தி இலா காந்தி பிபிசியிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010