செய்தியறிக்கை
| |
இராக்கின் துணை அதிபர்களில் ஒருவரான தாரிக் அல் ஹஷ்மி |
இராக்கில் தேர்தல் ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன
இராக்கிய துணை அதிபர்களில் ஒருவரான தாரிக் அல் ஹஸ்மி அவர்களால் நாட்டின் ஒரு பகுதி தேர்தல் சட்டத்துக்கு எதிராக வெட்டு வாக்கு பயன்படுத்தப்பட்டதை அடுத்து, ஜனவரியில் நடக்கவிருந்த தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராக்கிய தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல்கள் தாமதமாகும் என்பதையே அந்த வீட்டோ வெட்டு வாக்கு பிரதிபலிக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான காசிம் அல் அபௌதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்கள் குறித்த விடயம் நாடாளுமன்றத்தால் துரிதமாக கையாளப்படலாம் என்றும், அதனால் எந்தவிதமான தாமதமும் ஏற்படாது என்றும் கூறியிருந்தபோதிலும், அல் ஹஸ்மி அவர்கள், தேர்தல் சட்டங்களில் ஒரு பகுதி திருத்தியமைக்கப்பட வேண்டும் என்று முன்னதாகக் கூறியிருந்தார்.
வன்செயல்களால் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இராக்கியர்களுக்கு மேலும் அதிகமான நாடாளுமன்ற ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை தான் ஆதரிப்பதாக அவர் கூறினார்.
பாலத்தீனியர்களின் கட்டிடங்களை இஸ்ரேல் இடித்துள்ளதாக செய்திகள்
| |
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் |
இந்த கட்டிடத்தில் இரண்டு வீடுகள் இருந்ததாகவும், ஒரு வர்த்தக வளாகம் இயங்கி வந்ததாகவும் பாலத்தீனத்திருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையே தாம் இடிப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகளால் தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதால், வீடுகள் கட்டப்படுவதற்கு முறையாக அனுமதியைப் பெறுவது கிட்டத்தட்ட நடக்காத ஒரு காரியம் எனறு பாலத்தீனர்கள் கூறுகின்றனர்.
கடும் பாதுப்புக்குக்கு இடையே கால்பந்து போட்டி
| |
பாதுகாப்பு பணியில் சூடானிய போலீசார் |
இந்தப் போட்டியின் முடிவு உலகக் கோப்பைக்கு யார் தகுதி பெறப் போகிறார்கள் என்பதை நிர்ணயிக்கும்.
கடந்த சனிக்கிழமையன்று கெய்ரோவில் நடைபெற்ற இது போன்ற போட்டியை காண வந்த ரசிகர்கள் மோதிக்கொண்டன் காரணமாக, இன்றைய போட்டியில் விளையாட்டு வீரர்கள் மீது இருக்கும் அளவுக்கு ரசிகர்கள் மீதும் கவனம் இருக்கும் என்று பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
| |
த தே கூ நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் |
முன்னாள் சிறார் போராளிகளை சந்தித்தனர் த தே கூ உறுப்பினர்கள்
இலங்கையில் அம்பேபுஸ்ஸ மற்றும் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து புனர்வாழ்வு பெற்று இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் சிறார் போராளிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதன்கிழமை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இரத்மலானை இந்துக் கல்லூரியில் தற்போது சுமார் 250 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆனாலும் அவர்கள் அங்கேயும் இராணுவப் பாதுகாப்புடனேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை சந்தித்து திரும்பிய உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
அந்தச் சிறார்களுக்கு தனியான வகுப்பறைகளில்தான் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன என்றும், அவர்களுக்கு வெளியே சென்று நடமாட அனுமதி இல்லை என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
மிகக் குறைந்த நேரமே இந்த முன்னாள் சிறார் போராளிகளுடன் பேச தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தமது வீடுகளுக்கு விரைவில் செல்ல வேண்டும் என்கிற மனநிலையிலேயே இருப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி படகில் இருந்தவர்கள் இந்தோனீசியாவில் இறங்கியுள்ளனர்
| |
இந்த 56 பேரும், கடந்த வாரம் தாமாக அந்தக் கப்பலில் இருந்து இறங்கி அந்த முகாமில் இருக்கும் 22 பேருடன் சேர்ந்து கொள்வார்கள்.
அந்த 22 பேரிடமும் ஆஸ்திரேலிய அதிகாரிகள், அவர்கள் ஒருமாதத்துக்குள் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்தனர்.
ஆனால் தற்போது அந்தக் கப்பலில் இருந்து இறங்கியுள்ள 56 பேரில் நிலைமை என்ன ஆகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தற்போது தெரிந்துள்ளது எல்லாம், அவர்கள் அந்த இந்தோனீசிய தடுப்பு முகாமில், உரிய குடிவரவு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது தான்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஆறுமாதம் நிறைவு
| |
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் |
விடுதலைப் புலிகளுடான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசின் செய்தி ஊடகங்கள் இந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி அறிவித்தன.
எனினும் போருக்கு முக்கிய காரணமாக இருந்த இனப் பிரச்சினையை தீர்க்கும் முகமான நடவடிக்கைகள் இன்னும் துவக்கப்படவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
போரில் இறுதி நாட்களின் போது 30,000 முதல் 40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் கருதுவதாக மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கூட்டமைப்பு கூறுகிறது.
அரசியல் தீர்வுக்கான நகர்வுகளை முன்னெடுப்பதும், தமிழ் சிங்கள மக்களிடையே ஏற்பட்டுள்ள பிரிவினை மனப்பான்மையை தீர்க்கும் முகமான நடவடிக்கைகளையும் எடுப்பதே தற்போது மிகவும் அவசியமான ஒன்று என்று மனித உரிமைகளுக்கான யாழ் ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கோபாலசிங்கம் ஸ்ரீதரன் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரது பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
யாழ் மக்கள் மற்ற பகுதிகளுக்கு சுதந்திரமாக செல்லலாம் என அரசு கூறுகிறது
| |
யாழிலிருந்து செல்லும் பேருந்து ஒன்று |
புதன்கிழமை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது என்று வடமாகாண ஆளுநர் சந்திரஸ்ரீ தெரிவித்துள்ளார். யாழ் பகுதியிலிருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் இனி பாதுகாப்பு துறையினரிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்றிருந்த நடை முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதே போன்ற நடைமுறை யாழ்ப்பாணத்திலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கும் பொருந்தும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அனுமதி தேவையில்லை என்கிற நடைமுறை அமலுக்கு வந்திருந்தாலும் யாழ் குடாவிலிருந்து மக்கள் மற்ற பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதில் இன்னும் சில சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன என்று யாழ் குடா நாட்டில் இருக்கும் தன்னார்வ குழுக்களின் ஒன்றியத்தின் தலைவர் சிவஞானம் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டுள்ளார்
இது தொடர்பான மேலதிகச் செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக