செய்தியறிக்கை
| |
அரைவாசி ஐ.நா ஊழியர்கள் ஆப்கானில் இருந்து வெளியேறுகிறார்கள் |
ஆப்கானில் இருந்து அரைவாசிக்கும் அதிகமான ஐ.நா ஊழியர்கள் வெளியேற்றம்
பாதுகாப்பு நிலை குறித்த கவலைகளால் ஆப்கானில் உள்ள தமது ஊழியர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோரை தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற்றுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. .
சர்வதேச விருந்தினர் தங்கும் விடுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலில் 5 ஐ. நா ஊழியர்கள் கொல்லப்பட்டது முதல், அங்குள்ள பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
ஐ.நா ஊழியர்களைப் பொறுத்தவரை பாதுகாப்பு நிலை என்பது ஆப்கானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக இருப்பதாக அந்த அமைப்பின் சார்பில் பேசவல்ல கேய் எடி என்பவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஐ.நா நாட்டை விட்டு வெளியே தள்ளப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிபர் ஹமித் கர்சாய் அவர்கள் திறமையானவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்றும் நிர்வாக சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவி்ததார்.
ஆப்கானில் பன்னாட்டுப்படையின் வான் தாக்குதலில் பொதுமக்கள் பலி
| |
பலியானவர்களில் பல சிறார்களும் அடங்குவர் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இறந்தவர்களின் சடலங்களை ஹெல்மண்ட் மாகாணத்தின் தலைநகரான லஷ்கர் காஹ்வுக்கு எடுத்துச் சென்ற கிராமவாசிகள் அங்கு ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர்.
குண்டு ஒன்றைப் புதைக்க முயன்றார்கள் என்று தாங்கள் நம்பும் ஒரு கூட்டத்தின் மீது தரையில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று தாக்கும் ராக்கெட் ஒன்றினை ஏவியதாக கூறும் நேட்டோ தலைமையிலான கூட்டுப் படைகள், அதனால் பொதுமக்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அது குறித்து வருந்துவதாக தெரிவித்துள்ளது.
கரடிச்சுக்கு வலுக்கட்டாயமாக ஒரு சட்டத்தரணியைத் தர நீதிமன்றம் முடிவு
| |
கரடிச் |
இது வரை தனக்கு எதிரான வழக்கில் தானே ஆஜராக வேண்டும் என்று கராடிச் வலியுறுத்தி வந்தார். ஆனால் தனக்கு வழக்கை எதிர்கொள்ள மிகக் குறுகிய கால அவகாசமே இருந்தது என்று கூறி வழக்கில் ஆஜராவதை அவர் புறக்கணித்து வந்தார்.
கடந்த மாதம் தொடங்கிய இந்த வழக்கு விசாரணையை, புதிய சட்டத்தரணி தம்மை தயார் செய்து கொள்ளும் முகமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
போஸ்னியப் போரில் இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிராக குற்றமிழைத்ததாக தம்மீது கூறப்படும் குற்றச்சாட்டினை ரடோவான் கராடிச் மறுக்கிறார்.
தமது உறுப்பினர்களை வங்கதேசம் கைது செய்ததாக உல்பா குற்றச்சாட்டு
| |
தாக்காவில் உள்ள ஒரு பாதுகாப்பான வீட்டில் இருந்த அவர்களை துப்பாக்கி முனையில் சிவில் உடையில் வந்தவர்கள் அழைத்துச் சென்றதாக உல்பா அமைப்பு கூறியுள்ளது.
ஆனால், இது போன்ற கைதுகள் ஏதும் நடக்கவில்லை என்று வங்கதேச அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் அவாமி லீக் கட்சி வங்கதேசத்தில் பதவிக்கு வந்ததில் இருந்தே, உல்பா உள்ளிட்ட இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இயங்கும் கிளர்சிக்குழுக்கள் - வெளியேற வேண்டும் அல்லது நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அழுத்தத்ததை வங்க தேசத்தில் எதிர்கொண்டு வருகின்றன .
| |
செல்வம் அடைக்கலநாதன் |
செல்வம் அடைக்கலநாதன் இன்றும் விசாரிக்கப்பட்டார்
இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் அந்நாட்டின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று விசாரணை செய்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமையன்று இந்தியாவிலிருந்து திரும்பிய அடைக்கலநாதன் அவர்களிடம் இன்று வியாழக்கிழமையன்று பலமணி நேரங்கள் விசாரணை செய்து அவரது வாக்குமூலத்தை பொலிஸார் பதிவு செய்துள்ளதாகவும், மீண்டும் வெள்ளிகிழமையன்று வாக்குமூலத்தின் பதிவை நிறைவு செய்வதற்காக அவர் மீண்டும் பொலிஸார் முன்னிலையில் சமூகம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வவுனியாவில் நடந்த சில பிரச்சினைகள் தொடர்பாகவும், வெளிநாட்டில் தான் பேசிய சில உரைகள் சம்பந்தமாகவுமே விசாரணைகள் நடந்ததாகக் கூறிய செல்வம் அடைக்கல நாதன், பின்னர் இவை குறித்த முழுமையான தகவல்களைத் தருவதாக கூறினார்.
இலாபத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் 10 வீத பங்குகளை விற்க இந்தியா முடிவு
| |
ஏற்கனவே, பங்குச் சந்தைகள் பட்டியலில் உள்ள, இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் 10 சதம் பங்குகளை விற்க வேண்டும். அதேபோல, பங்குச் சந்தைகள் பட்டியலில் இடம்பெறாத, இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், பங்கு வெளியீடுகளை அறிவிக்க வேண்டும்.
இன்று நடைபெற்ற, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்திய பங்குப் பரிவர்த்தனை அமைப்பான செபியின் விதிமுறைகளின்படி, பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்கள், குறைந்தபட்சம் 10 சதம் பங்குகளை பொதுமக்களுக்கு விற்க வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இதுபற்றி செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
இணையத் தளத்துக்கு அடிமையானவர்களுக்கான முகாமில் சிறுவன் கொலை
| |
இணையத்துக்கு அடிமையாதல் |
இணையத் தளத்துக்கு அடிமையாகிவிட்ட தமது குழந்தைகளை அதிலிருந்து மீளச் செய்வதற்காக சில சீனப் பெற்றோர்கள் தமது குழந்தைகளை இத்தகைய முகாம்களுக்கு அனுப்புகின்றனர்.
ஆனால் இந்த முகாம்கள் நடத்தப்படும் விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதுவும் குறிப்பாக தெற்கு சீனாவில் உள்ள ஒரு முகாமுக்கு அனுப்பப்பட்ட 15 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட பிறகு இந்தப் பிரச்சனை அதிகமாகியுள்ளது. இதுபற்றி பிஜீங்கில் இருந்து குவன்டின் சோமர்வில் அனுப்பிய குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில்நேயர்கள் கேட்கலாம்.
சச்சின் டெண்டூல்கள் புதிய உலக சாதனை
| |
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியின் போதே இந்தச் சாதனையை டெண்டூல்கர் படைத்துள்ளார். ஹைதராபாத் நகரில் தனது 435 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடும் சச்சின் டெண்டூல்கர் இதுவரை ஒரு நாள் போட்டியில் 45 சதங்களை அடித்துள்ளார்.
ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்துள்ளவர்களின் பட்டியலில் டெண்டூல்கரை அடுத்து இலங்கையின் சனத் ஜெயசூரிய இடம்பெறுகிறார்.
ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக டெண்டூல்கர் இதுவரை 9 சதங்களை அடுத்துள்ளார். அந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் மிக வேகமாக சதமடித்த இந்தியர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஆனால், இந்த ஆட்டத்தில் டெண்டூல்கர் 175 ஓட்டங்களை எடுத்த போதிலும், இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக