JKR. Blogger இயக்குவது.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

தெற்காசிய விளையாட்டு போட்டியில் 24 பதக்கங்களுடன் 4ஆம் இடத்தில் இலங்கை


11ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் பங்களாதேஸ் தலைநகரான டாக்காவில் நடைப்பெற்று வருகின்றது. இதில் இலங்கை 24 பதக்கங்களுடன் 4ஆம் இடத்துக்கு பின்னடைவை கண்டுள்ளது.

போட்டியின் 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை 2ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கும், 3 ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் இடத்துக்கும் பின்தள்ளபட்டுள்ளதோடு 4 ஆம் இடத்திலிருந்த பங்களாதேஸ் 3 ஆம் இடத்துக்கு முன்னேரியுள்ளது.

இதேவேளை, 4 ஆம் நாள் இரவு நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில், இலங்கைக்கு 4 வெள்ளிப்பதக்கங்களும் 1 வெண்கலப்பதக்கமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஆண்களுக்கான 170 கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டப்போட்டியில் இலங்கை அணிக்கு தங்கப்பதக்கமும், இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கமும், பாகிஸ்தான் அணிக்கு வெண்கலப்பதக்கமும், கிடைத்தன.

நேற்று ஆண்கள் அணிகளிடையே நடைபெற்ற கபடிப்போட்டியில் இலங்கை அணி நேபாளம் அணியிடம் தோல்வி அடைந்தது. இதேபோல், இலங்கை, பாகிஸ்தான், அணிகளிடையே நேற்று நடைபெற்ற கான்போள் போட்டியில் பாகிஸ்தான் அணி 59க்கு 16 புள்ளிகள் வித்தியாசத்தினால் வெற்றி பெற்றது.

இலங்கை நேபாளம் அணிகளிடையே நடைபெற்ற ஹொக்கிப் போட்டியில் இலங்கை அணி 151 கோல்கள் வித்தியாசத்தினால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. இதேபோல் இலங்கை பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளிடையே நடைபெற்ற 20,20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதனைதொடர்ந்து இந்தியா 27 தங்கம், 11 வெள்ளி, 9 வெங்கலம் மொத்தமாக 47 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலாம் இடத்திலும், பாகிஸ்தான் 6 தங்கம், 13 வெள்ளி, 06 வெங்கலம் மொத்தமாக 25 பதக்கங்களுடன் 2 ஆம் இடத்திலும், பங்களாதேஸ் 5தங்கம், 5 வெள்ளி ,15 வெங்கலம் மொத்தமாக 25 பதக்கங்களுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடதக்கது. ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010