JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீர, வீராங்கனைகளை இம்முறை தேர்தலில் களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாகாணசபைத் தேர்தல்களின் போது பிரபல்யமானவர்கள் அதிகளவில் வெற்றியை ஈட்டியமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ஷ தெற்கில் போட்டியிட உள்ளதாகவும், பிரதமரின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க களுத்துறை மாவட்டத்திலும் தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.

மேலும், சர்வதேச கீர்த்தியைப் பெற்றுக் கொண்ட பிரபல கிரிக்கட் நட்சத்திரம் ஒன்றை மாத்தறை மாவட்டத்தின் சார்பில் களமிறக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவர்களைவத் தவிர பல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிக, நடிகையர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010