JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நியமனம்


பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை திங்கட்கிழமை முதல் இராணுவப் பேச்சாளருக்கான கட மையை அவர் பொறுப்பேற்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவத்தின் பிரதம களப்பொறியியலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை முதல் அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

முன்னர் இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

லண்டனிலிருந்து இலங்கை வந்துள்ள பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும் சமி க்ஞை அதிகாரியாகவும் நியமனம் பெற்றிருந்தார்.தற்போது அவர் வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக இராணுவப் பேச்சாளர் நியமனமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010