JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

தமிழர் ஒருவரின் கைது தொடர்பில், அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு எச்சரிக்கை


அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தமிழர் ஒருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில், அந்த நாட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிட்னியில் கணக்காளராக பணியாற்றிய ஆறுமுகம் ரஜீவன் என்ற 43 வயதுடைய தமிழரை, கடந்த 2007ம் ஆண்டு ஜுலை மாதம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிபதி கோலன் தலைமையில் நடைபெற்றது.

கைது செய்யப்படும் போது, தமது பொறுப்புக்களுக்கு மேலதிகமாக பொலிஸ் அதிகாரிகள் செயற்பட கூடாது எனவும், அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ய கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்

கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது நிதி வழங்கிய தமிழர்கள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.

எனினும் அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல், அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுகின்றமை சட்டத்துக்கு முரணானது என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010