JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ஜனாதிபதிக்கு கௌரவ கலாநிதி பட்டம். ரஷ்ய பல்கலைக்கழகம் வழங்கியது.


மொஸ்கோவில் அமைந்துள்ள உலகப் பிரசித்திபெற்ற ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவையொட்டி மொஸ்கோ கிரம்லின் மாளிகையில் இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதிக்கு மேற்படி உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளையதினம் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரீ மெட்வதேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். இரு தரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமையும் இந்த பேச்சு வார்த்தைகளையடுத்து இலங்கை ரஷ்யா இடையே முக்கிய சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் ஜனாதிபதியுடன் ரஷ்ய சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஊடகங்களுக்கு தகவல் தருகையிலே 30 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாம் முறையும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதியின் ரஷ்ய விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு மேலும் வலுப்பெறும் என தெரிவித்துள்ளார். இதுதவிர ரஷயாவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான விளாடிமிர் புட்டினையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்ய வர்த்தக சமூகத்துடன் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து அவர்களுக்கு தெளிவூட்டும் வகையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010