JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கம்


மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த நடைமுறை மற்றும் ஏனனய கெடுபிடிகள் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண முகாமைதுவ அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதாவது மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினை தொடர்பாக தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும், இதன் பேரில் ஜனாதிபதி மன்னார் மாவட்ட கடற்தளபதிகளுடன் உரையாடியதோடு மன்னார் மாவட்ட மீனவர்கள் 24 மணி நேரமும் தொழிலுக்கு செல்ல முடியும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்தவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக 6 ஆம் திகதி ஏற்பாடு செய்யபட்டிருந்த கூட்டத்திலேயே அமைச்சர் றிசாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் அவர்கள் நேற்றிரவு தலைமன்னாரில் உள்ள முகாமுக்கு சென்று அங்குள்ள கடற்தளபதிகளுடன் மீனவர்கள் 24 மணிதியால வேலை செய்வது தொடர்பாக கலந்துரையாடியும் உள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010