JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

"ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ரத்துச் செய்வதுகுறித்து முறையான தீர்மானம் எடுக்கப்படவில்லை''-ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர்


இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தற்காலிகமாக ரத்துச் செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் முறையான தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் அதற்கு இம்மாத இறுதிவரை அவகாசம் உள்ளது எனவும் பெல்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் லக்ஸம்பேர்க்கிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் நேற்று மாலை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில், ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற வர்த்தக சலுகைகளை முடிவுறுத்துவது சாதாரண இயந்திரம் போன்ற வேலையல்ல; அதனை தன்னிச்சையான முறையில் செய்து கொள்ளலாம். ஆனால் அதனைச் செய்யும்போது சம்பந்தப்பட்ட அரசியல் மற்றும் சமூக பொருளாதார பிரிவுகள் குறித்த புரிந்துணர்வுடன் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..

இலங்கை தூதுவர் கூறுகையில், இந்த விவகாரம் சம்பந்தமாக பலமுறை ஐரோப்பிய ஆணைக்குழுவின் கவனத்துக்கு தெளிவாக கூறப்பட்டுள்ளதுடன் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து இலங்கை பெறும் தகுதி குறித்து மீளாய்வு செய்ய வேண்டுமெனவும் தூண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010